சிவகங்கை மாவட்டம் ஒடுவன்பட்டி கிராமத்தில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்துவதால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் குரங்குகள் வீட்டினுள் புகுந்து அத்தியாவசிய வீட்டு உபயோக பொருட்களை எடுத்து செல்கிறது. எனவே குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.