வடமதுரை அருகே கொல்லப்பட்டி பிரிவில் மோர்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இது தற்போது போதிய பராமரிப்பின்றி புதர் மண்டி இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் சுகாதார வளாகத்தை பராமரித்து, சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.