அரியலூர் மாவட்டம், தா.பழூர் மதனத்தூர் சாலையில் துணை மின்நிலையம் உள்ளது. இதன் அருகே அனுமதியின்றி 24 மணி நேரமும் டாஸ்மாக் பார் நடைபெற்று வருகிறது. இங்கு மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு சாலையில் பாட்டில்களை உடைத்து வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், விவசாயிகள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் சமூக விரோத செயல்களும் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.