பெங்களூரு சர்ஜாப்புரா ரெயின்போ டிரைவ் லேஅவுட் அருகே நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையை அப்பகுதியினர் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளம் ஏற்பட்டதால், அந்த நடைபாதையில் சிமெண்டு குழாய்கள் வைக்கப்பட்டது. பல நாட்கள் ஆகியும் அந்த குழாய்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் பாதசாரிகள் சிரமம் அடைகின்றனர்.