தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பெரிய கோவில் அருகே உள்ள அகழிகள் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் அகழி முழுவதும் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. அதுமட்டுமின்றி செடி, கொடிகளால் அகழி விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறிவருகிறது. மேலும், பராமரிப்பில்லாத காரணத்தால் அகழிக்கு நீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரிய கோவில் அகழியை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?