கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் இந்தாண்டு பண்டிகை காலத்தையொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.