மூடப்பட்ட கதவு மீண்டும் திறக்கப்படுமா?

Update: 2022-09-12 11:49 GMT
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட கருவூல அலுவலகம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்திற்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இடது பக்க கதவு வழியாக பொதுமக்கள் சென்று வந்தனர். இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு அந்த கதவு மூடப்பட்டது. ஆனால் இதுவரை அந்த கதவை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் மேற்கண்ட அலுவலகத்திற்கு சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அந்த கதவை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்