சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா வெள்ளரி வெள்ளி கிராமத்துக்கு உட்பட்ட கொல்லப்பட்டியில் அங்கன்வாடி மையத்தில் உள்ள ஆழ்துளை குழாயில் ஊற்று ஏற்பட்டு தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளும், பெற்றோர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த ஆழ்துளை குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சக்தி, கொல்லப்பட்டி, சேலம்.