கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை எச்சம்பட்டியில் அங்கன்வாடி மைய கட்டிடம் பழுது அடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் விழுந்து மழைக்காலங்களில் மழைநீர் விழுகிறது. இதனால் எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதுபற்றி பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குழந்தைகளின் நலன் கருதி பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றி புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.