தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே எம்.செட்டி அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குணசேகரன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.