கிணற்றை சுற்றி பாதுகாப்பு சுவர் கட்ட வேண்டும்

Update: 2022-09-11 14:24 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கிராமத்திற்கு சத்திரமனை தண்ணீர் பந்தலில் இருந்து செல்வதற்கு குறுக்கே தார் சாலை உள்ளது. பெரம்பலூரில் இருந்து செட்டிகுளம் வருபவர்கள் அந்த சாலையை பெரிதும் பயன்படுத்துகின்றனர். ஆனால் அந்த சாலையில் ஒரு திரும்பும் பகுதியில் ஒரு இடத்தில் கிணறு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. சாலையை செல்வோர்கள் அதனை கவனிக்காமல் சென்றால் கிணற்றில் விழ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கிணற்றை சுற்றி பாதுகாப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்