விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள கீழப்பொட்டல் பட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் உள்ள பழைய கட்டிடம் சேதமடைந்து மேல் ஓடுகள் மழை மற்றும் சூறாவளி காற்றினால் ஒவ்வொன்றாக கீழே விழுகின்றன. இதனால் மாணவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி இந்த பள்ளியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு செய்து புதுப்பித்து தர வேண்டும்.
