கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் ஏராளமான குரங்குகள் முகாமிட்டுள்ளதுடன் அவை கடைகளுக்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை தின்று நாசப்படுத்தி வருகின்றன. மேலும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதிக்குள் விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?