விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கீழக்கொந்தை பகுதியில் 150-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகர் அருகே உள்ள ரேஷன் கடைக்கு செல்ல வேண்டிய உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக முதியவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க கீழ கொந்தை பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.