நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் குன்னூர் பகுதியில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இதற்கிடையே பகல் நேரத்தில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையே கடக்கும் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை தொந்தரவு செய்கின்றனர். எனவே வனத்துறையினர் கூடுதல் ரோந்து பணி மேற்கொண்டு வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.