சேலம் மாவட்டம் 28-வது வார்டு செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் முன்பு உள்ள தனியார் வணிக வளாகம் அருகே புதிதாக சாக்கடை கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இந்த சாக்கடை கால்வாய் அங்குள்ள கடைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் சாலைகளில் ஓடுகிறது. இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதன் அருகில் ஆஸ்பத்திரி உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ், சேலம்.