ஏரிக்கரையில் தடுப்புகள் அமைக்கப்படுமா?

Update: 2022-09-10 17:38 GMT

நாமக்கல் அருகே உள்ள எஸ்.பழையபாளையம் சின்னஏரி, பெரியஏரி கரைகளில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வந்தது. தற்போது ஏரியில் நீர் நிரம்பி இருப்பதால் அந்த பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஏரிக்கரையில் இருந்த சுவர் அகற்றப்பட்டு இருப்பதால் அவ்வழியாக செல்லும் பொது மக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரிக்கரையில் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்