தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தக்காளிமண்டி அருகில் மிகவும் பழமையான தாட்கோ வனிக வளாக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் சேதமடைந்து பயன்படுத்தாமல் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. இந்த நிலையில் கட்டிடத்தின் கீழே ஆபத்தை உணராமல் சாலையோர வியாபாரிகள் காய்கறி கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு இந்த கட்டிடத்தை இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ், தாமபுரி.