பள்ளிக்கூடத்துக்கு சுற்றுச்சுவர்

Update: 2022-09-10 17:24 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பில்பருத்தியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் மாணவ-மாணவிகள் பள்ளி நேரத்தில் வெளியே செல்கின்றனர். அதேபோன்று இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தில் நுழைந்து மது அருந்தி வருகின்றனர். எனவே இந்த அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகேசன், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்