பெங்களூரு காந்திநகர் சுதந்திர பூங்காவில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் உள்ளது. இந்த மையம் கடந்த சில மாதங்களாக பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இதனால் அங்கு தண்ணீர் வரவில்லை. சுதந்திர பூங்காவில் வாரத்திற்கு 4 போராட்டங்கள் நடக்கிறது. அந்த போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் குடிக்க தண்ணீர் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். அந்த குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை பராமரித்து தண்ணீர் வரவழைத்தால் அது பயனுள்ளதாக இருக்கும்.