பெங்களூரு கோரமங்களா கேந்திரியா சதான் பகுதியில் மேம்பாலம் அருகே சாலையோரம் கட்டிட கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த கட்டிட கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.