காய்ச்சல் மாத்திரை தட்டுப்பாடு

Update: 2022-09-10 10:03 GMT

அவினாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. முதலில் உடல் வலிபோல் வந்து பின்னர் அது காய்ச்சலாகிறது. இதனால் உடல் வலி வரும்போதே பொதுமக்கள் பயத்தில் அருகில் உள்ள அரசு மருத்துவ மனையை நாடுகிறார்கள். ஆனால் அங்கு காய்ச்சலுக்கான மாத்திரை இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சல் மருந்து பேராசிட்டமால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே மாத்திரை தாராளமாக கிடைக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

மயான வசதி