பாகூர் பகுதியில் பழமையான பிள்ளையார் கோவில் அருகில் உள்ள குளத்தின் கரையில் சிலர் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தினர். இதுபற்றி தினத்தந்தியில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் குளக்கரையில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க காரணமான தினத்தந்திக்கு பாராட்டுகள்.