நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டு சுமார் 20 ஆண்டுகள் ஆகிறது. தற்போது இந்த கட்டிடத்தின் மேற்கூரை கன்கீரிட்டுகள் சேதமடைந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் கிராம நிர்வாக அலுவலகத்தின் உள்ளே தண்ணீர் ஒழுகும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே பழுதடைந்த இந்த அரசு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.
-வினித், நல்லம்பள்ளி, தர்மபுரி.