விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி பஞ்சாயத்தை சேர்ந்த அமீர்பாளையம் கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் பன்றிகள் மற்றும் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் பன்றிகள் மூலம் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள் மற்றும் பன்றிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.