விக்கிரவாண்டி லட்சுமிநகர், பாரதிநகர், வ.உ.சி. நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஆத்திர அவசரத்திற்கு கூட வெளியே வந்து செல்ல முடியாத அவல நிலை உள்ளது. எனவே அப்பகுதி மக்களின் நலன் கருதி மேற்படி நகர்களில் வடிகால் வசதி அமைத்து தர வேண்டும்.