விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட முல்லை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை சாலையில் தனியாக செல்பவர்களை, விடாமல் துரத்திச் சென்று கடிக்கின்றன. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால் பலர் விபத்தில் சிக்கி வருகின்றனர். ஆகவே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.