கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் கேர்பெட்டா பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக் கட்டிடத்தின் அஸ்திவாரம் பழுதடைந்து தூண்கள் அந்தரத்தில் நிற்கின்றன. இதனால் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே பள்ளியின் அஸ்திவாரத்தை பலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.