திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கூடலூர் நகராட்சி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் பலர் உயிர் இழக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதனால் அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.