கடமலைக்குண்டுவை அடுத்த காமன்கல்லூர் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு நீர்தேக்க தொட்டியை இடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.