தேனி மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி 3-வது வார்டு கிருஷ்ணாநகர் மெயின்ரோட்டில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் வீடுகளில் வசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு கொசுக்கள் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்