நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலை என்.புதுப்பட்டிக்கும் வளையப்பட்டிக்கும் இடையில் சாலை ஓரங்களில் தொட்டியம் பகுதியில் இருந்து நாமக்கல் மற்றும் வெளியூர்களுக்கு வாழைத்தார் கொண்டு செல்லும் வாகனங்கள் அதில் உள்ள கழிவுகளை சாலை ஓரங்களில் போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் மழைக்காலங்களில் சாலையில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி காய்ந்து சருகானால், காற்று அடிக்கும் காலங்களில் தார்சாலையில் பறந்து போக்குவரத்துக்கு பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமச்சந்திரன், வளையபட்டி, நாமக்கல்.