ரெயில்வே சுரங்கப்பாலத்தில் மழைநீர்

Update: 2022-09-08 17:11 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனி பகுதியில் ரெயில்வே சுரங்கப் பாலம் உள்ளது. இந்தநிலையில் அந்த சுரங்கப்பாலத்தில் இரு சக்கர வாகனங்கள், மினி டெம்போக்கள் செல்கின்றன. மழைக்காலங்களில் நுழைவுப் பாலத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் மழைநீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதேஸ்வரன், நாமக்கல்.

மேலும் செய்திகள்