தெருநாய் தொல்லை

Update: 2022-09-08 17:09 GMT

சேலம் பெரமனூர் மாரியம்மன் கோவில் தெரு மற்றும் அவுசிங்போர்டு, 40 அடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் சிறுவன் ஒருவனை தெருநாய்கள் துரத்தி சென்று கடித்துள்ளன. இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்பவர்களை கடிக்க துரத்துகின்றன. மேலும் இரவு நேரங்களில் அவைகள் கத்துவதால் பொதுமக்களால் தூங்க முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

-நித்தீஷ், பெரமனூர், சேலம்.

மேலும் செய்திகள்