சேலம் மாவட்டம் சினிமா நகரில் மழை நீர் வடிகால் வசதி இல்லை. நகருக்கு அருகில் பள்ளபட்டி ஓடை உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் ஓடையில் நீர்வரத்து அதிகரித்து, மழைவெள்ளம் குடியிருப்புக்குள் புகுந்து விடுகிறது. மழை காலங்களில் இந்த அவல நிலை ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் நோய் தொற்றினால் அவதிபடுகின்றனர். எனவே இந்த பகுதியில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.
-கெளதம், சேலம்.