தர்மபுரி- சேலம் சாலையில் அதியமான் கோட்டை பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்தது. இதனால் அதியமான்கோட்டை பைபாஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்ட வாகனங்கள் அருகே உள்ள ரெயில்வே கேட் வழியாக சென்று வருகின்றன. இந்த பகுதியிலும் அடிக்கடி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே அதியமான் கோட்டை ரெயில்வே மேம்பாலத்தை வாகன போக்குவரத்திற்கு திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறையினர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகேந்திரன், தர்மபுரி.