ஆமை வேகத்தில் பள்ளி கட்டுமான பணி

Update: 2022-09-08 16:16 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளி அருகே உள்ள எம்.செட்டி‌அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உளளது. போதிய வசதி இல்லாததால் பள்ளி அருகிலேயே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கூடுதல் கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆனால் இந்த பணி இதுவரை முடிக்கப்படாமல் ஆமைவேகத்தில் நடக்கிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியை நேரில் பார்வையிட்டு பள்ளி கட்டிட கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாரியப்பன், எம்.செட்டி‌அள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்