கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் கீழ்நத்தம் ஊராட்சியில், தற்போது மழைபெய்து வருவதால் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கிராம மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க கீழ்நத்தம் கிராமத்தில் கொசு மருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.