சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வேளாண்மை குடியிருப்புக்காக கட்டப்பட்ட கட்டிடம் தற்போது பழடைந்து கிடக்கிறது. இதில் சமூக விரோதிகள் மது குடிப்பது, சூதாடுவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால், துர்நாற்றம் வீசுவதோடு, விஷ சந்துக்களும் நடமாடுகின்றன. இதை தவிர்க்க பாழடைந்த கட்டிடத்தை இடித்து அப்பறப்படுத்த வேண்டும்.