திருவெண்ணெய்நல்லூர் தாலுகா அத்திப்பட்டு, அரும்பட்டு கிராமத்திற்கு செல்லும் வழியில் தரைப்பாலம் உள்ளது. தற்போது இந்த பாலம் உடைந்து தண்ணீர் ஓடுவதால், இதை பாதுகாப்பற்ற முறையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடக்கும் நிலை உள்ளது. இதனால் அவர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க உடைந்த சிறுபாலத்தை சீரமைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.