திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெண்ணை வலம் ஊராட்சி அமாவாசைப்பாளையம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இருந்தது. இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாாிகள் அந்த நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்தினர். இதில் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.