ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. ஈரோடு-நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் பாலமாக இருப்பதால், தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. அந்த மேம்பாலத்தில் செடி வளர்ந்து காணப்படுகிறது. செடி பெரியதாக வளர்ந்துவிட்டால் பாலத்துக்கு சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பாலத்தின் மீது வளர்ந்துள்ள செடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.