விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக 2-வது பணிமனை சுற்று சுவரில் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து வருகின்றன. இதனால் அந்த சுவர் தற்போது பலவீனம் அடைந்து உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அருகில் தந்தை பெரியார் நகரில் உள்ள போக்குவரத்து ஊழியர்கள் குடியிருக்கும் வீடுகள் உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சுவரில் வளர்ந்து வரும் செடி, கொடிகளை அகற்றி, சுவரை சீரமைக்க வேண்டும்.