விருதுநகர் மாவட்டம் பாவாலி கிராமத்திற்கு செல்லும் பொதுமயான பாதை கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இது புகாராக தினத்தந்தி நாளிதழில் வெளியானது. இந்த நிலையில் பொது மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். எனவே உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.