படகு போக்குவரத்து தொடங்கப்படுமா?

Update: 2022-09-08 11:10 GMT

நாமக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் கமலாலய குளம் உள்ளது. இந்த குளத்தில் நகராட்சி சார்பில் பொழுதுபோக்கு அம்சமாக படகு போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது சில ஆண்டுகளாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் மாலை நேரங்களில் பொழுதுபோக்கிற்காக பூங்காவிற்கு வரும் சிறுவர், சிறுமிகள், பொதுமக்கள் படகு பயணம் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். எனவே மீண்டும் படகு போக்குவரத்தை தொடங்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்