நாய்கள் தொல்லை அதிகரிப்பு

Update: 2022-09-07 10:11 GMT

திருப்பூர் மாநகர் 1-வது மண்டலத்திற்கு உட்பட்ட அனுப்பர்பாளையம் பஸ் நிறுத்தத்தை அடுத்த மெயின் ரோட்டில் இருபுறமும் நாய்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள், வாகனங்களில் செல்வோர் அச்சத்தில் செல்ல வேண்டி உள்ளது. நாய்கள் சாலைகளில் குறுக்காக ஓடுவதால் விபத்து ஏற்பட வாய்பு உள்ளது. நாய்கள் அதிகரிப்பினால் பொதுமக்களும், வெளியூரில் இருந்து வருபவர்களும் நாய்கள் கடித்து விடுமோ என்ற அச்ச உணர்வுடன் தவிக்கிறார்கள். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்