ஈரோட்டை அடுத்த நசியனூர் கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் அருகே ரோட்டோரத்தில் கோழி கழிவுகள் கொட்டப்பட்டு் வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. அந்த வழியாக செல்லும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே அந்த இடத்தில், 'இனிமேல் இங்கு கோழி கழிவுகளை கொட்டக்கூடாது' என்று அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.