சந்தை பராமாிக்கப்படுமா?

Update: 2022-09-07 07:18 GMT

அந்தியூர் நகரில் வாரம்தோறும் திங்கட்கிழமை சந்தை நடந்து வருகிறது. இங்கு மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவ வாய்ப்பு உள்ளது. அருகில் வணிக வளாகம் கட்டும் பணி நடைபெறுவதால் மிகவும் குறுகலான இடத்தில் பொதுமக்கள், வியாபாரிகள் சந்தைக்கு சென்று வர சிரமப்படுகிறார்கள். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் சுகாதாரமான முறையில் சந்தையை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்