மதுக்கடை மாற்றப்படுமா?

Update: 2022-09-07 06:31 GMT

உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சிலுவை நகரில் குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் அரசு மதுக்கடை அண்மையில் திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையின் அருகில் குடியிருப்புகள், பஸ் நிறுத்தம், ேகாவில்கள் உள்ளன. மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி அங்கு விபத்துகள், தகராறுகள் ஏற்பட்டு வருகிறது. இதனால், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, மாணவ-மணவிகள் நலன்கருதி மதுக்கடை அங்கிருந்து அப்புறப்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சகாய தினேஷ், சிலுவைநகர், கன்னியாகுமரி.

மேலும் செய்திகள்