மழைநீரால் மக்கள் அவதி

Update: 2022-09-06 17:44 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எலச்சிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 87 கவுண்டம்பாளையம் குமரமங்கலம் புதுதெரு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள கிணறுகளும் நிரம்பி உள்ளன. பெரும்பாலான வீடுகளில் மழைநீர் ஊற்று நீர் போல நிலத்தடியில் இருந்து வந்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். இரவு நேரங்களில் தூங்ககூட முடியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து மழை நீரை அகற்ற வேண்டும்.

-பாண்டி, குமரமங்கலம், நாமக்கல்.

மேலும் செய்திகள்